பொன்னேரியில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார் ஆய்வு



திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார்.ரா ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி எதிரில்  கட்டப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நூலகம் மற்றும் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூர் ஊராட்சி,பட்ட மந்திரியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுமான பணிகள் அதன் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் நேரில் விசாரித்தார். பின் பணியினை பார்வையிட்டு விரைவில் அனைத்தையும் தரமான முறையில் முடிக்கும்படி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ்,பொன்னேரி சாராட்சியர் அப்துல் ராசிக்,மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன்,மணி சேகர்,பொன்னேரி இன்ஸ்பெக்டர் தமிழன்பன்,தவெக  திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன்,பொன்னேரி நகர செயலாளர் கோபி,மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்கள் பிரபு,டில்லி பாபு,சோழவரம் வடகிழக்கு செயலாளர் அருண் பாண்டி உள்ளிட்ட பல தவெக நிர்வாகிகள் இதில் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments