சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது



காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி கே பிரபு அறிவுறுத்தின்படி  பழைய பேருந்து நிலையத்தில் அருகே உள்ள நீர் மோர் பந்தலில் 200 மரக்கன்று வழங்கப்பட்டன.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நகரச் செயலாளர் தெற்கின் தளபதி அண்ணன் கிளாசிக் சேகர் அவர்களின் முன்னிலையில், காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவைச் சேர்ந்த ஸ்மிதா ராமச்சந்திரன் மற்றும் சியாம் சுந்தர் ஆகியோர் 200 மரக்கன்றுகளை வழங்கினர்.



இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி இணை அமைப்பாளர் பிரியா அவர்கள், 27வது வார்டு நிர்வாகிகளான ஆனந்த் கார்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியைச் சேர்ந்த எங்கல்ஸ், லட்சுமிபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

"மரம் வளர்ப்போம் – சுற்றுச்சூழலை காப்போம்" என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியாக அமைந்தது.

Post a Comment

0 Comments