கமுதி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலி



ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மின்விளக்கு தேர்பவனி நேற்று இரவு பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து, விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான சிறப்பு கூட்டுத் திருப்பலி கூட்டம் காலையில் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை நடைபெற்ற இந்த விசேஷ திருப்பலியில் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவ பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்துகொண்டனர். இதனால் ஆலய வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

சிறுவர்களுக்கு "புது நன்மை" வழங்கும் நற்செயல் இன்றைய திருப்பலி கூட்டத்தின் சிறப்பம்சமாக, தகுதி பெற்ற சிறுவர்-சிறுமியர்களுக்கு "புது நன்மை" (First Holy Communion) வழங்கும் புனித நிகழ்வு நடைபெற்றது.புத்தி விவரம் தெரிந்த சிறுவர்கள், கத்தோலிக்க விசுவாசத்தின் அடிப்படை உண்மைகளையும், நற்கருணையின் மகத்துவத்தையும் உணர்ந்து கொள்ளும் தகுதியைப் பெறும்போது, இந்த "புது நன்மை" என்னும் அருளடையாளம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி, இன்று நடைபெற்ற வழிபாட்டில் சிறுவர்கள் முதன்முறையாக அந்தப் புனித அப்பத்தை (நற்கருணை) தங்களின் நாவில் ஏந்தி, இறை அருளைப் பெற்றுக் கொண்டனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினரும், பங்கு மக்களும் இணைந்து மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு கமுதி நகரில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments