ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் கைரேகைசட்ட நூற்றாண்டு நினைவு மாநாட்டை முன்னிட்டு வேல் பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது.
பசும்பொன்னில் கைரேகை சட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநாட்டு திடலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது .
ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் தூரி முனியசாமி,தூவல் ராமசாமி,பெருநாழி போஸ்,கருத்தரிவான் செந்தூர்பாண்டி,முதுகுளத்தூர் புலிகேசி ஆகியோர் தலைமையில் கடலாடி ஸ்ரீ வாகட குருஜி குருமார்கள் முன்னிலையில் யாகசாலை சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க வேல் பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து 21 நாள் தேவர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடத்தி பொதுமக்கள் வழிபாடு செய்வார்கள். அதன்பிறகு 28 ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகப்பெருமான் ஆசியுடன் பொதுக்கூட்டம் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தென்னக விவசாயிகள் சங்க பொது செயலாளர் அர்ச்சுணன் மறவர்கள் மாநாடு ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் சக்திவேல் தேவர்,ராஜராஜன்,கண்ணதாசன்,கண்ணுச்சாமி,மாயகிருஷ்ணன்,வழக்கறிஞர் ஆறுமுகம்,சிவகாசி முத்துக்குமார்,போஸ், சுரேஷ், செழியன், மு.வெள்ளைப்பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டார்கள் . மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.


0 Comments