குருவராஜ கண்டிகை கிராமம் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்..... 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.....



திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  வட்டம் குருவராஜ கண்டிகை கிராமத்தில்   அருள்மிகு  ஸ்ரீ பொன்னியம்மன்   கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  ஆடி மாதத்தை முன்னிட்டு முதலாம் ஆண்டு    பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அங்காளம்மன்  கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதை தொடர்ந்து மேளதாளம் முழங்க மஞ்சளாடை அணிந்து விரதமிருந்த பெண்கள் பால்குடமேந்தி ஊர்வலமாக வந்தனர். 



முக்கிய வீதிகளின் வழியே சுமார் 1கிமீ பக்தர்கள் புடைசூழ வந்த பால்குட ஊர்வலம்  பொன்னியம்மன்  கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நாளை பொன்னியம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாக அறங்காவலர் பொத்தபு வினயகுமார்  ரெட்டி  மற்றும் குருவராஜ  கண்டிகை கிராம மக்கள் செய்திருந்தனர்.



Post a Comment

0 Comments