கீழக்கரை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதல்..... 3 இளைஞர்கள் மரணம்

  


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முத்துக்கனி மகன் கணேசன் 25,  மங்கள் ராஜ் மகன் வசந்த் 25,  செல்வராஜ் மகன் சஞ்சய் 25. மீனவர்களான 3 பேரும் இரு சக்கர வாகனத்தில்  ஏர்வாடியில் இருந்து மாயாகுளத்திற்கு நேற்று மாலை சென்றனர். 

புல்லந்தை அருகே தச்சு ஊருணி ஆபத்தான வளைவில் திரும்பியபோது ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி சென்ற கார்  மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்தில் இறந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வசந்த், சஞ்சய் ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு 7 மணியளவில் இறந்தனர். காரில் பயணித்த 4 பேரில்  முதுகுளத்தூரைச் சேர்ந்த அருண் குமார் (40) என்பவரும் மற்றோருவரும் லேசான காயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து ஏர்வாடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments