திருவள்ளூர்: பொன்னேரி அருகே மெதூர் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது


திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாவது வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் வாடை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நிகழ்ச்சியானது தினசரி அம்மன் திருவீதியில் இரவு உலா வந்த நிலையில் கடைசி நாளான இன்று பகலில் அம்மன் வீதி உலா வந்தார்.நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் செய்து எடுத்து வந்த கூழ் சட்டியை தலையில் வைத்து ஊர்வலமாக மண்ணடி கோயிலுக்கு சென்று அங்கு எல்லையம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மெதூர். கிராம நிர்வாகிகள் எஸ்.பாஸ்கர்,எம்.என் ஜோதி குமார்,எம்.ஆர் ரவி,நாகவேல்,சிலம்பரசன் மற்றும் கிராம பொதுமக்கள் நிகழ்ச்சி பணிகளை மேற்கொண்டனர். இதில் மெதூர் கிராமம்,மெதூர் காலனி உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments