காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி 01.07.2026 முதல் 08.07.2026 வரை நடைபெற உள்ளதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தெரிவித்தார் . தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க இக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு சேரும் மாணவ மாணவிகளுக்கு ஒரு வார காலம் கல்லூரியில் உள்ள துறைகளைப் பற்றியும், பாடத்திட்டங்கள் குறித்தும், தேர்வு முறைகள் குறித்தும், கல்லூரியில் உள்ள தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணி திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் மற்றும் விளையாட்டுத் துறை குறித்தும், போட்டித் தேர்வு பற்றிய விழிப்புணர்வு குறித்தும், சாலைப் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அந்தந்தத் துறை வல்லுநர்களைக் கொண்டு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தெரிவித்தார்.

0 Comments