தேனி அருகே தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.... அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்பு

 


தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான முதலமைச்சர்  ஜோசப் விஜய் - 52வது பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில்  நடைபெற்றது. தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் லெப்ட் பாண்டி முன்னிலை வகித்தார். 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எரிசக்தி துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கலந்து கொண்டு, பொதுமக்கள், மற்றும் பெண்கள், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments