ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். இதில், கிராம உதவியாளர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கண்டனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்வில் வட்டத் தலைவர் அன்பரசன், வட்டச் செயலாளர் மணிமாறன், வட்டப் பொருளாளர் அன்புமலர் மற்றும் ஏராளமான கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.




0 Comments