புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவன தலைவர் அன்பழகனாரின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்கும் 2 மாணவிகளுக்கும், கட்டுமாவடி, குப்பத்தேவன், புதுத்தெரு, செந்தலைவயல் ஆகிய அரசு பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் கலந்து கொண்டு கல்வி ஊக்கத் தொகை வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்டுமாவடி, செம்பியன்மகாதேவி பட்டினம், கணேசபுரம் மூன்று ஊர் தலைவர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





0 Comments