திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அடுத்த கெட்டணமல்லி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் மற்றும் ஸ்ரீ நாகலட்சுமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த மாதம் 23-ஆம் தேதி தீ மிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல்,கூழ் ஊற்றுதல், பால்குடம் ஊர்வலம், கங்கை திரட்டுதல், உள்ளிட்டவை நடைபெற்றது. நாள்தோறும் அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம், ஜவ்வாது,பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நாளான இன்று காப்பு கட்டி விரதம் இருந்த 108.க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி,உடல் முழுவதும் சந்தனம் மலர்களால், அலங்காரம் செய்து ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் ஒருவருக்கு பின் ஒருவர் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தீமிதி திருவிழாவை முன்னிட்டு இரவை பகலாக்கும் கண்கவர் வான வேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி சாமி வீதி உலா நடைபெற்றது கோவில் நிர்வாகிகள் வழக்கறிஞர் முரளி, இரிசன், பூபதி, விநாயகன் உள்ளிட்ட கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர் .




0 Comments