அறந்தாங்கியில் பள்ளிவாசலை சுற்றி வந்த வீரமாகாளியம்மன் ஆடித்தேர்..... தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த இஸ்லாமியர்கள்



புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித்திருவிழா விமரிசியாக நடைபெற்று வரும் நிலையில் இக்கோயிலில் தேரோட்டத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்று நிறைவடைந்தது.

இரண்டாம் நாளான இன்று திருத்தேரானது ராஜேந்திரசோழீஸ்வரர் ஆலயம் முன்பாக புறப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

அறந்தாங்கி பெரிய பள்ளிவாசலை சுற்றி வந்தபோது மத நல்லிணக்கத்தை போற்றுகின்ற வகையில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள்  தேர் திருவிழாவில் பங்கேற்கவந்த பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் குளிர் பானங்கள் வழங்கி  மகிழ்ந்தனர்.

இது மதங்களைக் கடந்த மனிதநேயத்தை போற்றும் வகையில் இருந்த நிலையில் வீரமாகாளியம்மன் இரண்டாவது நாள் தேரோட்ட திருவிழா மாலை நிறைவடைந்தது.இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.






Post a Comment

0 Comments