கும்மிடிப்பூண்டி அருகே அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராம காலனி    பகுதியில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன்  ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு முதல் ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து  கடந்த 22, ஆம் தேதி பந்தக்கால் உடன் தொடங்கி  கணபதி ஹோமம்  நடைபெற்றது  தொடர்ந்து  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காப்பு கட்டி விரதம் இருந்து தீக்குழியில் இறங்கி ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு தீமிதித்து  தாங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்  அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அசம்பாவிதம் தவிர்க்க வன்னன் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடை  பெரியஓபுளாபுரம் கிராம காலனி பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.



Post a Comment

0 Comments