கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில் தமிழக வெற்றிக்கழகத்தின் 100-வது நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாதர்ப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் .அசோகன் முன்னிலை வகித்து, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் எஸ். விஜயகுமார் பேசுகையில்:
"கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை மாநிலத்திலேயே அனைத்து வசதிகளும் நிறைந்த ஒரு முன்னோடித் தொகுதியாக மாற்றுவதே எனது முதன்மை நோக்கமாகும். தொகுதி மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும், அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்பேன். எனக்கு வாக்களித்த மக்களுக்குத் தொண்டாற்றுவதை எனது கடமையாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவேன்." என்று குறிப்பிட்டார்.
4..லட்சத்தில். மதிப்பில்.நலத்திட்டஉதவிகள்
இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மாதர்பாக்கம் மற்றும் தெற்கு ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 500 ஏழை, எளிய மக்களுக்குச் சுமார் 4.லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் கொட்டும் மழையிலும் பொருட்படத்தாமல் பொதுமக்களுக்குசட்டமன்ற உறுப்பினர் எஸ் விஜயகுமார்.வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் கிருபாகரன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புவனேஷ்குமார், இணைச் செயலாளர் ஜே. வினோத்குமார் ரீகன், ஒன்றிய பொருளாளர் ஏ. பி.எஸ்.ஆஷா மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் டி. சுதாகர், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வண்ணமதி ஒன்றிய துணைச் செயலாளர்கள் பி.எஸ் எசுரத்தினம் எம். ராகுல், ஒன்றிய மகளிர் அணி இணை அமைப்பாளர் சாரதா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர்கள் லோகேஷ், ஜெ. ஹரி பாபு அன்பு பழனி. நிஷாந்த் ஹரி.உள்ளிட்ட மகளிர் அணி மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக.நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர்.




0 Comments