தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம், பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேனி நகர செயலாளர் எம்.பி. வினோத் தலைமையில், அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் எம்.பி.எஸ். முருகன் முன்னிலையில் நான்கு அம்ச கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யவும், தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதியில் சுமார் 98-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும். பிசிஆர் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். போடிநாயக்கனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகளை மேம்படுத்தாத நிர்வாகத்தை கண்டிக்க வேண்டும். தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில், அதிக அளவில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை சரியாக சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தேனி அல்லிநகரம் நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு அளிக்கும் நிகழ்வின் போது,பாரதிய ஃபார் வட் பிளாக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0 Comments