ராமநாதபுரம்: செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிறுவை சங்கம் துவக்க விழா

 


ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை  அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

இவ் விழாவினை கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.  நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம்          ஐ. ஆர். சி. எஸ். சுந்தரம், ஐ. ஆர். சி எஸ். செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன், புரவலர் தேவி உலகராஜ், பி.ஆர்.ஓ. சிவா, ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்  செஞ்சிலுவை சங்கத்தின் நோக்கம், மற்றும் சிறப்பியல்புகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  கல்லூரித் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும்மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஒய்.ஆர். சி யின் தலைவர்,செயலாளர்,பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். நிகழ்வின் முன்னதாக போதையில்லா சமூகம் பற்றிய உறுதிமொழியை கல்லூரி முதல்வர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். வரவேற்புரையினை வேதியல் துறையின் உதவி பேராசிரியரும் ஒய் ஆர் சி யின் நிகழ்வு அமைப்பாளருமான செல்வகுமார் ஆற்றினார். நிகழ்வின் நன்றியுரை வேதியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் முகமது   நஃவுல் நன்றி கூறினார்.  நிகழ்வின் ஏற்பாடுகளைக் கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோரால்  சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments