அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் ஆண்டு விழா



அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டு விழா ஆகஸ்ட்  21, 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய மூன்று நாட்கள் கே பி கொண்டாட்டமாக நடைபெற இருக்கின்றது. இது குறித்து அமைப்பின் தலைவர் வி.சுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை அன்று அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் அருகே அமைந்துள்ள  டாக்டர் தஸ்தஹீர் கிரிக்கெட்  ( ஏ ப்பி எல் மைதானம் ) மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளும், இம்மாதம் 30 ஆம் தேதி, அறந்தாங்கி அரசு மாதிரி மேனிலைப்பள்ளி வளாகத்தில் கலைத்திறன் போட்டிகளும் நடைபெறும்.இதற்கான சுற்றறிக்கைகள் அனைத்துப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முறையாக அனுப்பப் பெற்றுள்ளன. விளையாட்டுப்போட்டிகளில் ஓட்டம்,நீளந்தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல், தொடர் ஓட்டம் மற்றும் சிலம்பப்போட்டிகளும் இளையோர், மேலோர் மற்றும் மேன்மேலோர் ஆகிய பிரிவுகளில் ஆடவர் மகளிருக்கென தனித்தனியே போட்டிகள் நடைபெறும். விளையாட்டுப்போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவிக்கும் ஆடவர் மற்றும் மகளிர் பள்ளிகளுக்கு தலா ஒரு சுழற்கோப்பையும்,தலா ரூபாய் 5027 ரொக்கப்பரிசும், அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவிக்கும் அரசுப்பள்ளிக்கென ஒரு சுழற்கோப்பையும், ரூபாய் 5027 ரொக்கப்பரிசும்  வழங்கப்பெறவுள்ளன.

தொடர்ந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைஅரசு மாதிரி மேனிலைப்பள்ளி வளாகத்தில் கலைத்திறன் போட்டிகளாக, பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், ஓவியம்,பாரம்பரிய உணவு தயாரித்தல், வெட்டு ஒட்டு வர்ணம் தீட்டு,நம்ம ஊரு விஞ்ஞானிகள்,செயற்கை நுண்ணறிவு படைப்பாக்கம், சதுரங்கம்   வினாடி வினா, கரோக்கி பாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு புதிய போட்டிகளும் நடைபெறவுள்ளன.இவற்றுள் பேச்சுப்போட்டிகள்,ஓவியப்போட்டி, பாரம்பரிய உணவு தயாரித்தல் ஆகிய போட்டிகளுக்கு ரொக்கப்பரிசுகளும், சிறப்புப்பரிசுகளும்  வழங்கப்பெறவுள்ளன.

ஆண்டு விழாவின் நிறைவு நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை அன்று டி என் எஸ் மண்டபத்தில் நடைபெறும். இதில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும்,மாறுவேடப்போட்டி , நடனப்போட்டிகள் , தஙகத்தம்பதியர் நிகழ்ச்சியும் நிறைவாகப் பரிசளிப்பு விழாவும் நடைபெறவுள்ளன. 

மாறுவேடப்போட்டியில்,முதல் மூன்று இடங்களைப்பெறும் நட்சத்திரங்களுக்குத் தலா 3027, 2027,1027 ரொக்கப்பரிசுகளும், நடனப்போட்டிகள் இரண்டிலும் முதல் மூன்று இடங்களைப்பெறும் பள்ளிகளுக்குத் தலா ரூபாய் 5027,3027, 2027 ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பெறவுள்ளன.கலைத்திறன் போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவிக்கும் முதல் பள்ளிக்கு சுழற்கோப்பையும், ரூபாய் 5027 ரொக்கப்பரிசும் வழங்கப்பெறும். 

கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,மதிப்பிற்குரிய  சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பணிச்செம்மல்கள், மக்கட்பணிச் செம்மல்கள், மக்கள்  பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், தகைசால் சான்றோர்கள்,   திரைப்பட நடிகரும் இயக்குநருமான கலைமாமணி போஸ் வெங்கட், விஜய் டிவி நீயா நானா புகழ் டாக்டர் சி.கோபிநாத், திரைப்பட நடன இயக்குநர் மாஸ்டர் தினேஷ் மற்றும் பல பிரபலங்களும் பங்கேற்று மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

போட்டிகள் மற்றும் விழா ஏற்பாடுகளை அமைப்பின் கவுரவத்தலைவர் கே.சி.சுரேஷ்குமார் அவர்கள் தலைமை யில், செயலாளர் எம்.ஜி.ராஜா, பொருளாளர் சு.விஸ்வமூர்த்தி, இணைச்செயலாளர் ப.கார்த்திகேயன், துணைச்செயலாளர் சி.காசிநாதன் ஆகியோர் வழிகாட்டுதல்படி, செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர்,ஜெ.ரஜினி, கத்தார் எஸ்.பாலு, ஜி.வேணுகோபால், சி.நந்தகுமார், சி.விஜய், ட்டி.மனோகர், எஸ்.ப்பி.பார்த்திபராஜா, கே.பரக்கத்துல்லா, ப.கார்த்திக் சி.மாணிக்கம், தனலட்சுமி எஸ். சரவணன், எம்.ஜி.வினோத்குமார், எஸ்.சக்திகுமரன், கே.ஆர்.வெங்கடேசன், மற்றும் ஜூனியர் கிளப் உறுப்பினர்கள்   கா.சங்கீத்குமார்,கே.ஆர்.ராஜேஷ், எம்.ஜி.ஆர்.ஹர்ஷா, சு.கிரண், பி.எழில்,ஆர்.ஆகாஷ், வி.மனோஜ், கா.விஷ்வா,பா.பரத், ஏ..ஸ்ரீராம், மு.சுரேந்திரன்,எம்.ஜி.ஆர்.சரணிதா, எம்.ஜி.எஸ்.நேத்ராகாந்தி , எம்.ஜி.வி.சிவானி உள்ளிட்ட பலரும் செய்து வருகின்றனர்.கே பி.கொண்டாட்டம் நடைபெறும் மூன்று நாட்களும் பங்கேற்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பெறும்" என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments