ஒண்டிவீரன் நினைவு தினம்..... கமுதியில் திருவுருவ படத்திற்கு தவெக மாவட்ட செயலாளர் மதன் மலர் தூவி மரியாதை



ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - காளியம்மன் கோவில் தெரு பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255-வது நினைவு தினம்  தவெக நகர் கழகம் சார்பில்  அனுசரிக்கப்பட்டது .

மலர்களால் அலங்கரிங்கப்பட்ட ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில், ஒன்றிய செயலாளர்கள்,நகர் கழகநிர்வாகிகள் மற்றும் அருந்ததியர் சமுதாய பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் இனிப்பு மற்றும் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் மதன்  துவக்கிவைத்தார்  விழாவிற்கான ஏற்பாடுகளை தவெக நகர் கழக நிர்வாகிகள் மற்றும்  அருந்ததியர் தவெக நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments