மீஞ்சூர்: முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் வசித்து வந்தவர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76). தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த க.சுந்தரம் அண்ணா, கலைஞரால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். மீஞ்சூர் கிளைக்கழக செயலாளர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். 1984ல் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்த நிலையில் 1989ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.



 கலைஞர் அமைச்சரவையில் அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து 1991ல் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த க.சுந்தரம் 1996 சட்டமன்ற தேர்தலில் பொன்னேரி தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக எம்எல்ஏவாக வென்றார். அப்போது கலைஞர் அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் க.சுந்தரத்திற்கு பொறுப்புகளை வழங்கி கலைஞர் அழகு பார்த்தார். கழக துணை பொது செயலாளர், உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த க.சுந்தரம் இறுதியாக திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.



 கடந்த 2023ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா விருது வழங்கி கவுரவித்தார். சில ஆண்டுகளாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி காலமானார். முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு மீஞ்சூரில் அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மீஞ்சூர் பேரூர் திமுக சார்பில் மீஞ்சூர் பேரூர் திமுக செயலாளர் க.சு. தமிழ்உதயன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் மருத்துவர் க.சு.செந்தில் ராஜ்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் க.சு.தமிழ்பிரியன் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராசன், ஆகியோர் கலந்து கொண்டு 1000பேருக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள் எல்லாபுரம் மூர்த்தி, ஆரணி வெ. அன்புவாணன், கே.சுப்பிரமணி, ஏ.கே. சுரேஷ், எம்.எல். ரவி, மணிபாலன், நிலவழகன், கும்மிடிப்பூண்டி ரமேஷ், பொன்னேரி டாக்டர் பரிமளம், அத்திப்பட்டு ஜி.ரவி, வெற்றி என்ற ராஜேஷ், டி.ஜே.ஜி. தமிழரசன், செந்தமிழ் சசி, மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர்  கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Post a Comment

0 Comments