திருவாடானையில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்.... பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்



ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் மஹாலில் மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பான 'டிசம்பர் 3 இயக்கம்' சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்திற்கு அமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மகாலட்சுமி, மாவட்டப் பொருளாளர் நாகசாமி மற்றும் மாநிலப் மகளிர் அணிச் செயலாளர் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​இக்கருத்தரங்கில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றதுடன், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

​மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கி வரும் மாதாந்திரப் பராமரிப்புத் தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.3,000-ஆக உயர்த்த வேண்டும்.

​அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

 மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, திருவாடானை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தைத் தரைத்தளத்திற்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

​இந்நிகழ்வில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ராவுத்தர் மைதீன், அவைத்தலைவர் வீரலிங்கம், ஒன்றியத் தலைவர் கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் கணேசன் உட்பட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments