கமுதி பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வுசெய்தார்

 


இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்  ஆய்வு செய்தார்.

கமுதி அருகே செங்கொடிநகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாதை வசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கமுதி தொழிலதிபர் கோபால் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை பாதைக்காக வழங்கினார். அந்த நிலம் அரசின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, செங்கொடிநகர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, கொண்டு வரப்பட்டு, பாதைக்கான ஆவண நகலை குடியிருப்பு வாசிகளிடம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வழங்கினார். 

செங்கொடி நகர் குடியிருப்பு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, கமுதி அருகே பெரியஉடப்பங்குளம், கோட்டைமேடு, நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை பார்வையிட்டு முறையாக குடிநீர் வழங்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகராஜ், சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள், கமுதி வட்டாட்சியர் அய்யாத்துரை, ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments