தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தெற்குத் தெரு சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு தொண்டி 14-வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு தலைமை தாங்கினார். ஜென்னதுல் பிர்தவுஸ் வரவேற்றுப் பேசினார்.
தமுமுகவின் மாநில செயலாளர் சாதிக்பாட்சா, தெற்குத் தெரு ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, சமூக ஆர்வலர் ஜான்முகம்மது, 15-ஆவது வார்டு கவுன்சிலர் பெரியசாமி, பரக்கத் அலி, அன்சாரி, ஹம்மாது நவ்பிக், செரிபா, ஆலிமா நாச்சியா மற்றும் ஆலிமா செய்யது சுல்த்தான் ஆகியோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
சமூக நல அலுவலர் மெர்சி ஊர் நல அலுவலர் சசி ஆகியோர் மேற்பார்வையில் யில் முகாம் நடைபெற்றது. இதில் தொண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் திருமணம் ஆகாத முதிர்கன்னிகள் என 270-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு நலவாரியப் பதிவுகளை மேற்கொண்டனர்.
தொண்டியில் இச்சிறப்பு முகாம் நடைபெற உத்தரவிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், திருவாடானை சட்ட மன்ற உறுப்பினர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மகளிர் அணி நிர்வாகி ஜுனைதா நன்றி தெரிவித்தார்.
ராமநாதபுரம்

0 Comments