தமிழகஅரசு மருத்துவ கல்லுாரிகளில் புதிய டீன்களை நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் தாரேஷ் அகமது சமீபத்தில் உத்தரவிட்டார்.அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அமுதாராணி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில் நோய்க்குறியியல் துறையின் தலைவராக பணிபுரிந்த ஜி.செல்வாம்பிகை பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் ரராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பொறுப்பேற்றார்.மருத்துவக் கல்லுாரி அலுவலர்கள், மருத்துவத்துறை பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

0 Comments