அறந்தாங்கி அருகே பேருந்து வழித்தட நீட்டிப்பை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்

 


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், புதுக்கோட்டை மண்டலம் சார்பில் ஆர்.புதுப்பட்டினத்தில், அறந்தாங்கி, ஓரியூர் (வழி) நாகுடி, கட்டுமாவடி, மீமிசல் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையிலும், சிறுகாசாவயலில் ஆவுடையார்கோவில், சுப்ரமணியபுரம் (வழி) காசாவயல், பட்டமுடையான், சிறுகாசாவயல் (தொட்டு), தொண்டைமானேந்தல், நாகுடி வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையிலும், பேருந்து வழி தட நீட்டிப்பு வசதியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



 இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் கார்த்திகேயன், துணை மேலாளர்கள் சிராஜுதின், தில்லைராஜ், கிளை மேலாளர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments