திருச்சியில் “நல்லதோர் வீணை செய்தே” சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது



திருச்சி லட்சியம் படைப்பாளர் களம் சார்பில்“நல்லதோர் வீணை செய்தே  சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.லட்சியம் படைப்பாளர் களம் நிறுவனர் முனைவர் சதாசிவம் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற மகாகவி பாரதியாரின் வரிகள், மனித வாழ்க்கையின் மதிப்பையும் அதன் நோக்கத்தையும் ஆழமாக உணர்த்துகின்றன. மனித உடலும் அறிவும் அரிய கருவிகள்; அவற்றை பயனற்ற வாழ்க்கையில் வீணடிக்காமல், உலக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதே இப்பாடலின் மையச் சிந்தனையாகக் கொள்ளலாம்.

வீணை இசையை உருவாக்கும் கருவி. அதுபோல மனித உடலும் அறிவும் உயர்ந்த செயல்களை உருவாக்கும் கருவிகளாகும். அறிவு, திறமை, ஆற்றல் ஆகியவற்றைப் பெற்ற மனிதன் அவற்றை சுயநலத்திற்காக மட்டுமல்லாமல் சமூகத்தின் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும். “எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்” என்ற பாரதியின் சிந்தனை, மனிதனுக்கு வழங்கப்பட்ட அறிவுடன் பொறுப்பும் இணைந்திருப்பதை நினைவூட்டுகிறது.

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற சிந்தனையாளர்கள் மனித அறிவு, ஒழுக்கம், நற்பண்பு குறித்து சிந்திக்க வைத்தனர். டார்வினின் பரிணாமக் கோட்பாடு மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் நீண்ட பரிணாமப் பயணத்தை விளக்கியது. பிளேக் முதல் கொரோனா வரை பல்வேறு பெருந்தொற்றுகளை எதிர்கொண்ட மனிதன், அறிவியல் மற்றும் மருத்துவத்தின் துணையுடன் புதிய தீர்வுகளை உருவாக்கி வந்துள்ளான்.

அறிவியல் வளர்ச்சியின் புதிய கட்டமாக செயற்கை நுண்ணறிவு உருவெடுத்துள்ளது. மனிதர்கள் சேகரித்து உருவாக்கிய அறிவு மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு AI செயல்படுகிறது. எனவே, தொழில்நுட்பம் வளர்வதுடன் மனிதனும் தனது அறிவைப் புதுப்பித்துக்கொண்டு, அதை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.அறிவு இருந்தாலே மனிதநேயம் இருக்கிறது என்று பொருளல்ல என்பதை வரலாறும் உணர்த்துகிறது. சூடான் பஞ்சத்தின் போது புகைப்படக் கலைஞர் கெவின் கார்ட்டர் எடுத்த, உணவு முகாமை நோக்கி நகர முடியாமல் தவித்த குழந்தையின் அருகில் பிணம் தின்னும் கழுகு காத்திருக்கும் புகைப்படம் உலகையே உலுக்கியது.

அவருக்கு  அந்த புகைப்படம் புரஸ்கார் விருதைப் பெற்று  தந்தது ஆனால் ஆனால் பிறகு அவரின் மனசாட்சியை யும் பிடித்து உலுக்கியது. அந்த புகைப்படம் எடுத்த நொடியில் அந்த குழந்தையை தூக்கிச் சென்று உணவு வாங்கி தந்திருக்கலாமே என்ற கேள்வியை பொதுச் சமூகம் எழுப்பியது.இறுதியில் அந்த புகைப்படக்கலைஞன் தற்கொலை செய்து கொண்டான்.

அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனிதநேயப் பொறுப்புடன் பயன்படுத்தப்பட வேண்டும். மனித நலனுக்காக உருவான தொழில்நுட்பம் தவறான பயன்பாட்டால் அழிவை ஏற்படுத்தலாம். அதனால் அறிவின் உயரத்தைவிட, அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே முக்கியமானது. அலெக்சாண்டர் குறித்து பரவலாகக் கூறப்படும் ஒரு வாழ்க்கைப் பாடமும் இதையே நினைவூட்டுகிறது. மருத்துவர்களாலும் பணத்தாலும் மரணத்தைத் தடுக்க முடியாது; இறுதியில் மனிதன் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை உணர்த்தும் வகையில், தனது இரு கைகளும் கல்லறைக்கு வெளியே தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது. செல்வமும் அதிகாரமும் நிலையற்றவை; மனிதன் விட்டுச் செல்ல வேண்டியது அவன் செய்த நன்மைகளே.

டால்ஸ்டாயின் எழுத்துகளில் போர், வன்முறை, மனசாட்சி, மனிதநேயம் போன்ற கேள்விகள் முக்கிய இடம் பெற்றன. அஹிம்சையை கடைப்பிடித்து வாழ்ந்த கஜகஸ்தான் நாட்டில் வசித்த டுகாப்பூர்

சமூகம் கட்டாய இராணுவ சேவை செய்ய மறுத்த தற்காக நாடு கடத்தப்பட்டார்கள் அவர்களின் கப்பல்பயணச்செலவிற்காக பத்து வருடம் எழுதாமல் இருந்த டால்ஸ்டாய் எழுதிய நூல்தான் தான் புற்றுயீர்ப்புநாவல்,

காந்திக்கும் டால்ஸ்டாய்க்கும் நெருங்கிய நட்பு இருந்தது,அவர்கள் திருக்குறள் , கிராமப்பொருளாதாரம், அஹிம்சைகுறித்து .

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி அகிம்சையை வலியுறுத்தியதும், பகத்சிங் உள்ளிட்டோர் வேறுபட்ட போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்ததும், காலச்சூழல் மனிதனின் சிந்தனையையும் செயலையும்  வடிவமைக்கிறது என்பதை காட்டுகின்றன.அஹிம்சை மீது நம்பிக்கை வைத்த காந்தி பிறகு" செய் அல்ல செத்து மடி" என்று சொன்னார்.

ஆயுதப்போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த பகத்சிங் கும் அவருடைய நண்பர்களும் சிறைக்குள் ஐம்பத்தந்து நாட்களுக்கு மேலாக அஹிம்சை போராட்ட வடிவமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள் 

பாரதியாரின் “நல்லதோர் வீணை” என்ற உருவகம் இத்தனை சிந்தனைகளையும் ஒரே இடத்தில் இணைக்கிறது. மனித உடல் வீணை; அறிவு அதன் இசை; செயல்பாடு அதன் இசைக்கருவி; மனிதநேயம் அந்த இசையின் நோக்கம்.மனிதனுக்கு அறிவு கிடைத்தது உயர்வதற்காக; ஆற்றல் கிடைத்தது பிறருக்கு உதவுவதற்காக; வாழ்க்கை கிடைத்தது உலகம் பயனுற வாழ்வதற்காக.எனவே, நல்லதோர் வீணையாகப் பெற்ற மனித வாழ்க்கையை அறியாமை, சோம்பல், சுயநலம் ஆகியவற்றின் புழுதியில் எறியாமல், அறிவாலும் மனிதநேயத்தாலும் இனிய இசையை உருவாக்குவதே உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்றார்.

தொடர்ந்து பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன்,V தமிழ் தொலைக்காட்சிA.நெல்சன் கிரகிக்கும் திறனுக்காக மூன்று சாதனைகளை படைத்த செல்வி S.R.தன்ஷிகா உள்ளிட்டோருக்கு இலட்சியம் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. லட்சியம் படைப்பாளர் களம் திருச்சி மாவட்ட 

தலைவர் G.ஸ்ரீதர்,செயலர் T.கலைச்செல்வன், பொருளாளர் S.P.கண்ணன், ஒருங்கிணைப்பாளர் A.முகமது சாதிக் நிர்வாகிகள் , M.மணிகண்டன், A.ஜனனி அழகிரி, கௌரவ தலைவர்கள்: கவிஞர் பொன்மலர், பொ.ஜெயபாலன், கௌரவ ஆலோசகர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் பிளட் R.ஷாம் P.ஜெசிந்தா கிளமெண்ட், B.சசிக்குமார் உட்பட இலக்கிய ஆர்வலர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments