சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக (24.09.2026 ) நேற்று தன்னார்வலர்களுக்கான காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி பட்டறை( Paper Bag Workshop) நடைபெற்றது. இந்நிகழ்வானது ஒரு சிறந்த சமூக சேவை முயற்சியாகும். இது நெகிழி (Plastic) இல்லாத இந்தியாவை உருவாக்குவதோடு தன்னார்வலர்களுக்கு ஒரு பயனுள்ள சுயத்தொழில் திறனையும் கற்றுக்கொடுக்கின்றது.
இத்தகைய சிறப்பு பயிற்சி பட்டறையை திரு செந்தில் குமார், வட்டார வளர்ச்சி துணை அலுவலர், திருச்சிராப்பள்ளி அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாணவிகள் கலந்துக் கொண்டதோடு மட்டுமில்லாமல் காகிதப் பை தயாரித்து கட்டணமில்லாமல் கடைகளுக்கு விநியோகம் செய்தனர்.




0 Comments