தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், லட்சுமிபுரம் அருகே உள்ள சருத்துப்பட்டியில் ‘வேலவன் பேங்கர்ஸ்’ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், வேலவன் பேங்கர்ஸ் நிறுவனத் தலைவர் ராம தண்டபாணி தலைமையேற்று, கிளை அலுவலகத்தை துவக்கி வைத்தார்.
இப்புதிய கிளை சருத்துப்பட்டி, சிந்தியம்மன் கோவில் தெரு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளும், வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு உபசரிப்புகளும் செய்யப் பெற்றன. இந்த நிகழ்வில், அதுஅதிமுக பெரியகுளம் நகர துணைச் செயலாளர் வெங்கடேசன், மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். இந்த வேலவன் பேங்கர்ஸ் நிறுவனத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அதிக விலைக்கு அடகு தொகை வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments