ஆவுடையார்கோயில் அருகே அரசு கல்லூரியில் மின்னணு பயிர்க் கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது



ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி  வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், தமிழ்நாடு தோட்டக்கலை நடத்திய மின்னணு பயிர்க் கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம், கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சரளா தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். அனைத்துத்துறைத்தலைவர்கள்  முன்னிலை வகித்தனர். 



முகாமில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சா.திருச்செல்வம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று,மின்னணு பயிர்க் கணக்கெடுப்புத் திட்டத்தின் நோக்கம், செயல்முறைகள் மற்றும் மாணவத்தன்னார்வலர்களின் பங்களிப்புகள் குறித்து,  மாணவ, மாணவரிடையே விளக்கிப் பேசினார். 



முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட  அனைத்துத்துறை மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை வரவேற்றார்.நிறைவாகத்திட்ட அலுவலர் முனைவர் ச.ரமேஷ் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments