ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா முன்னிலை வகித்தார்.முகாமில் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு, தொழுநோய் குறித்த விழிப்புணர்வு, பல் பராமரிப்பு முறைகள், இளம் வயதில் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார விழிப்புணர்வு கருத்துகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.நிகழ்ச்சியில் மருத்துவர்கள் நிதீஷ்குமார், வேணிசாந்தினி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, சபரி முருகன், கருணாகர சேதுபதி, பகுதி சுகாதார செவிலியர் அன்புச்செல்வி, செவிலியர் பாக்கியா, கிராம சுகாதார செவிலியர்கள் இந்திரா, வேலுநாச்சியார், ஹேமா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன், மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments