கர்மவீரர் காமராஜரின் காலை உணவு திட்டத்தை கே எல் கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.கும்மிடிப்பூண்டியில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார் துவக்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 1முதல் 8ஆம் வரை இத்திட்டத்தை விரிவுபடுத்தியது.
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் விஜய் சென்னை திருவான்மையூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இத்திட்டத்தினை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மாலதி. த.வெ.க வெற்றி கழக. மாவட்ட பொருளாளர் கிருபாகரன் கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் பழனி நிர்வாகிகள் பிரகாஷ் அன்பு இஷாத் மூர்த்தி நிஜாமுதீன் சந்துரு அஞ்சலி குமரவேல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜோதி.. சந்துரு அஞ்சலி மாதர்பாக்கம் டேவிட் சுதாகர். பிரிவின் குமார் தா வெ. க நிர்வாகிகள் மகளின் நிர்வாகிகள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்.கலந்து கொண்டனர்.



0 Comments