கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவில் சாக்கு வேடம் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்



ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் ஆவணி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றி காப்பு கட்டுடன் துவங்கியது.அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் வழிபாடு, நடைபெற்று வந்தது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்.



விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம்  மாலை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. செங்கப்படை கிராமத்தில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன் ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக ,கோவிலை வந்தடைந்து பின்னர் முளைப்பாரியை குண்டாற்றில் கரைத்தனர். முன்னதாக ஊர்வலத்தின் முன்பு பக்தர்கள் சிலர் உடல் முழுவதும் வைக்கோல் வைத்து சாக்கால் அதனை தைத்து,நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இத்திருவிழாவை காண்பதற்கு சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இக் கிராம பொதுமக்கள் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

Post a Comment

0 Comments