பொன்னேரி: காங்கிரஸ் கட்சியின் இயக்க மறு சீரமைப்பு திட்டம் கட்சிப் பொறுப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்டன



அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் உட்கட்சி கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான சீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொன்னேரியில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.



 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ். வி. சரவணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத்தலைவர் டி. எல். சதாசிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர், இதனை தொடர்ந்து மாவட்ட, நகர, மண்டலம், ஒன்றிய கட்சி பொறுப்புகளுக்கு விருப்பம் தெரிவித்து பலர் விண்ணப்ப மனுக்களை அளித்தனர் இதில் ஆரணி பொன்னேரி மீஞ்சூர் மண்டல தலைவர்கள் 32 பேர் பதவிக்கு 300 பேர் விருப்ப மனு அளித்தனர், நகரம் ஒன்றியம் மண்டலம்  4 பொறுப்புகளுக்கு 35 பேர் மனு அளித்தனர்.



, இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் கராத்தே பழனி, நகரத் தலைவர் ஜெய்சங்கர், வழக்கறிஞர் மாவட்டம்துணைத் தலைவர்  கார்த்திக், மாவட்டம் செயலாளர் தியாகராஜன் சிற்பி ரவிக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்,

Post a Comment

0 Comments