ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், கடம்பாகுடி ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்ப பகுதிகளில் புள்ளிமான்கள் சாலையை கடக்கும் என்பதால் அதற்கான அடையாள குறியீடுகள் சாலை ஓரம் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments