அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் ஆண்டு விழா



அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 27 ஆம் ஆண்டுத் தொடக்க விழா டி என் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அறக்கட்டளையின் தலைவர் வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கி வரவேற்றார்.செயலாளர் ராஜா, பொருளாளர்  விஸ்வமூர்த்தி, இணைச்செயலாளர் கார்த்திகேயன், துணைச்செயலாளர் காசிநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் பழனித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செயற்குழு உறுப்பினர் பிரியா ராஜா மாணவ, மாணவியரை வாழ்த்தினார்.மாறுவேடப்போட்டி மற்றும்  நடனப்போட்டிகள்,   நடைபெற்றன.இப்போட்டிகளில் 35க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.கலைத்திறன் போட்டிகளில் அதிக வெற்றிப்புள்ளிகளைக்குவித்த அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கே.பி. 27 கல்ட்சுரல்  சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.



திரைப்பட இயக்குநர், நடிகர் கலைமாமணி போஸ் வெங்கட் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தங்கத்தம்பதியர் நிகழ்ச்சியை நடத்திப்பரிசுகளை வழங்கினார்.  விழாவில் அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆர் ஓ சிஸ்டமும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்குத் தேர்வாகி உள்ள நாயக்கர்பட்டி மாணவி சிந்தாமணிக்கு ரூபாய் 15,000 உதவித்தொகையும், வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூபாய் 40,000 மதிப்பிலான டேபிள் சேர்களும் வழங்கப்பெற்றன.    



போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுளை,மேனாள் அமைச்சரும்,  ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான மெய்யநாதன், அமைப்பின் கவுரவத்தலைவர் சுரேஷ்குமார்,சாகித்ய அகாதமி ஆலோசனைக்குழு உறுப்பினர் கவிஞர் தங்கம்.மூர்த்தி, திரைப்பட நடன இயக்குநர் தினேஷ்குமார், மணமேல்குடி ஒன்றியப்பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன், விஜய் டிவி நீயா நானா புகழ் டாக்டர் கோபிநாத், ராஜமகாகுரு கழுகுமனையார், அகில இந்திய எஸ் ஆர் அறக்கட்டளையின் நிறுவனர் பால சண்முகம், தமிழன் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் டான் சத்தியமூர்த்தி, முத்துப்பிள்ளை கேண்டீன் நிறுவனர்  கர்ணன்  ஆகியோர் வழங்கிச் சிறப்புரை ஆற்றினர்.விழாவில் பள்ளித்துணை ஆய்வர் இளையராஜா,  அறந்தாங்கி நகர்மன்ற உறுப்பினர்கள்,  பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.நிறைவாக துணைச்செயலாளர் காசிநாதன்  நன்றி கூறினார்.



போட்டி ஏற்பாடுகளை  செயற்குழு உறுப்பினர்கள் சேகர், பாலன்,ரஜினி,  வேணுகோபால்,ஜெயச்சந்திரன், வெங்கடேசன், நந்தகுமார்,ராஜமுருகன், விஜய், மனோகர், பார்த்திபராஜா, பரக்கத்துல்லா, கார்த்திக் மாணிக்கம், தனலட்சுமி  சரவணன், வினோத்குமார், சக்திகுமரன், அதிஷ்டா வெங்கடேசன்,சங்கீத்குமார், மற்றும் ஜூனியர் கிளப் உறுப்பினர்கள்   ராஜேஷ், ஹர்ஷா, கிரண், எழில் முருகன், ஆகாஷ்,சதீஷ், மனோஜ், விஷ்வா, சுபாஷ் சந்திரன்,ஹரி பிரசாத், பரத், ஸ்ரீராம், சுரேந்திரன்,பேரெழில்,பிரியா சங்கீத்குமார்,சரணிதா,நேத்ராகாந்தி,ஹரிணி,நிகில்ராஜ், ஆகிபா,பிரியதர்ஷினி,பராஸ் அகமத்,கீர்த்தன்யா, பயாஸ் அகமத், சேணவி, ஷிவானி,சுபிக்ஷா உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.





Post a Comment

0 Comments