கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் எம். சம்பத் தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் செயலாளர் சேகர், பொருளாளர் சரவணன், துணை செயலாளர்  ரோஸ் குமார் , இணை செயலாளர் ராமச்சந்திரன், கோதண்டன், நூலகர் ஜட ராயன்.  முன்னிலையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் வழக்கறிஞர்கள் தனித்தனி அணியாக களமிறங்கினர்.

 இதில் முதலாவதாக சரண்ராஜ் அணியினரும், இரண்டாவதாக அலெக்ஸாண்டர் அணியினரும், மூன்றாவதாக சங்கர் அணியினர் வெற்றி பெற்று கோப்பைகளை தட்டிச் சென்றனர் பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழும், பதக்கங்களையும் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டை கும்மிடிப்பூண்டி வழக்கறிஞர் சங்கத்தின் விளையாட்டு துறை செயலாளர் புருஷோத்தமன் பொறுப்பேற்று செய்திருந்தார் இதில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments