ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரப் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சிதலைவர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் பார்வையிட்டார்.
உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை கண்காணித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சி ஆலேந்தல் கண்மாய், கொட்டகுடி ஊராட்சி நடுவக்குடி கண்மாய் பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டார் மேலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுடன் நின்று விடாமல் அவை மீண்டும் வளராத வகையில் வேருடன் முழுமையாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், கண்மாய் மற்றும் அரசு நிலங்களின் எல்லைகளை நில அளவையர்கள் மூலம் முறையாக அளவீடு செய்து எல்லை கற்களை நிறுவி எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சிதலைவர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், கூடுதல் கலெக்டர் திவ்யான் ஷீ நிகம் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருவாடானை அருகே அரசத்துார் கண்மாயில் 7.1 எக்டேரில் நடக்கும் பணியையும், அதே போல் பெருவாக்கோட்டை கண்மாயில் 14.92 ஏக்கரில் நடைபெறும் பணியையும் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

0 Comments