பெரியகுளம் பகுதியில் வ.உ.சி திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

 


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ .உ. சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு, அவரது 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தேனி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் முறுக்கோடை ராமர் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 அதனை தொடர்ந்து, கீழ வடகரை வெத்தலை மடம் பகுதியில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரம் பிள்ளை திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பாஸ் மைதீன், பெரியகுளம் நகரக் கழகச் செயலாளர் பழனியப்பன், தேனி  நகரச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்,  அதிமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் பாண்டியராஜன், சுந்தரபாண்டியன், வெங்கடேசன்,  மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments