தேனி :பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் உள்ளூர் சுயதொழில் செய்யும் மகளிருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை மனு

 


தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நாகமணி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக உணவுத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.  மனுவில் தெரிவித்துள்ளதாவது:

 தேனி மாவட்டத்தில் சுமார் 40 பள்ளிகளில் பயிலும் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்கும் திட்டத்திற்கு அரசு தற்போது ஆன்லைன் டெண்டர் அறிவித்துள்ளது.

கடினமான சான்றிதழ் நிபந்தனைகள் இந்த ஆன்லைன் டெண்டரில் பங்கேற்க ஜி.எஸ்.டி (GST), வருமான வரிச் சான்று உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கேட்கப்படுவதால், சிறு, குறு தொழிலில் ஈடுபடும் பெண்களால் இதில் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

உள்ளூர் மகளிரின் வாழ்வாதாரம் வெளி நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதை விட, அந்தந்த பகுதி பள்ளி அமைந்துள்ள ஊர்களில் உணவுத் தொழிலில் ஈடுபடும் உள்ளூர் மகளிரை நேரடியாகத் தேர்ந்தெடுத்து வாய்ப்பளித்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

 சத்தான உணவை உடனுக்குடன் வழங்க வழி உள்ளூர் பெண்கள் மூலம் சமைத்து வழங்கப்படும் போது பள்ளி குழந்தைகளுக்கு சரியான நேரத்திலும், சூடாகவும், தரமான உணவை வழங்க முடியும்.

எனவே, சிறு தொழில் செய்யும் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தற்போதைய ஆன்லைன் டெண்டர் முறையை உடனடியாக ரத்து செய்து, உள்ளூர் மகளிர் அமைப்புகளுக்கும் சுயதொழில் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் முன்வர வேண்டும்" இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments