கீழக்கரையில் சர்வதேச கடலோர தூய்மை தினம்..... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பங்கேற்பு.....

 


 உலகம் முழுவதும் சர்வதேச கடலோர தூய்மை தினம் (International Coastal Cleanup Day) கொண்டாடப்படும் நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கடற்கரையில் மாபெரும் தூய்மைப் பணி சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரி மற்றும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காலை நேரத்தில் தொடங்கிய இந்த தூய்மைப் பணியில், கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக்பாட்டில்  கண்ணாடிதுண்டுகள் மற்றும் இதர கடல் கழிவுகளை மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து அகற்றி சுத்தம் செய்தனர் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக, கடற்கரைகளை குப்பைகளில் இருந்து பாதுகாத்தல், கடல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்தல் குறித்தும்  எடுத்துரைக்கப்பட்டதுமேலும் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பங்கேற்று கடலோர தூய்மை பணி குறித்து  உறுதிமொழியும் அனைவராலும் ஏற்கப்பட்டது.

Post a Comment

0 Comments