நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் குரவபுலம் பாய்ண்டு காலிமர் பன்னாட்டு பள்ளியில் நாகப்பட்டினம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன்-2026 சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் சேம்பியன் போட்டிகள் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட அளவில் 4 வயது முதல் 15 வயது வரை உடைய நாகை, திருத்துறைப்பூண்டி,, திருப்பூண்டி, ஆயக்காரன்புலம்,, வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் ரோடு ஷோ போட்டிகளில் பங்கு பெற்றனர்.
இப்போட்டியை பள்ளியின் இயக்குநர் சாகுல் ஹமீது கொடியசைத்து போட்டியினை துவங்கி வைத்தார். மாநில நடுவராக பணி புரியும் எம். ஆனந்த், கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை முறையே ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் எனத் வெற்றியாளரை தேர்வு செய்யப்பட்டார். 150க்கும் மேற்ப்பட்ட மாணக்கர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.முழு பாதுகாப்புடன் இப் போட்டியில் பள்ளியின் முதல்வர் சிராஜு நிஷா பேகம் பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார். நாகை மாவட்ட செயலாளர் (ஸ்கேட்டிங்)பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



0 Comments