திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதிலுள்ள ஏ ஏ எம் தனியார் திருமண மண்டபத்தில் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின் பகிர்மான வட்டம்/ வடக்கு/ பொன்னேரி, தண்டையார்பேட்டை கோட்டம் சார்பில் பிரதம மந்திரி சூரிய யோஜனா சோலார் திட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சோலார் உபயோகம் குறித்து மின் துறை அதிகாரிகள் மூலம் முழுமையாக சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. அப்பொழுது 1 கே. வி க்கு மத்திய அரசு மானியம் 30ஆயிரமும் தமிழ்நாடு அரசு மானியம் 5ஆயிரம் வழங்குவதாகவும் இதேபோல் 2 கே. வி. க்கு மத்திய அரசு மானியம் 60ஆயிரமும் தமிழ்நாடு அரசு மானியம் 10,ஆயிரமும் 3 கே. வி. க்கு மத்திய அரசு 78ஆயிரமும் மானியமும் தமிழ்நாடு அரசு 22 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது எனவே திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மின்சார துறை செயற்பொறியாளர் ஆர். பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் என். சிவசங்கரன்(பொன்னேரி தெற்கு), நந்தினி தேவி(மீஞ்சூர்), பன்னீர்செல்வம்(பஞ்செட்டி), உதவி பொறியாளர்கள் நரசிம்மன் (பொன்னேரி தெற்கு), சரவணன் (பொன்னேரி கிழக்கு), விக்ரம் (பழவேற்காடு), சுரேஷ்(மேலூர்), கோமதி(உதவிபொறியாளர்), ஆனந்தன்(மீஞ்சூர்டவுன்) மீராபாய் (மீஞ்சூர் தெற்கு), உள்ளிட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் திவாகர் (தொழில்நுட்ப உதவியாளர்) சுனில் (தொழில்நுட்ப உதவியாளர்), பிரபாவதி (துணை வணிகவிய அலுவலர்), வெ. நதியா (இளநிலை பொறியாளர்), உள்ளிட்ட மின்துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் சோலார் பேனல் விற்பனையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்சார துறை சார்பில் சோலார் திட்ட விழிப்புணர்வு முகாமானது பொது மக்களுடைய பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.



0 Comments