நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது. இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments