தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்த நிலையில் தற்போது முடிவுகள் டிசம்பரில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தற்போதைய தகவல் படி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments