புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தாந்தாணியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கலையரங்கம் கட்டித்தர பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ - 07 லட்சம் கலையரங்க கட்டுமான பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்ட நிலையில் பள்ளி மாணவர்களை அழைத்து கலையரங்க கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வை தொடங்கி வைக்க சொன்னார்.
இந்நிலையில் அரசு பள்ளி புதிய கலையரங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட நிலையில் பள்ளி மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த நிகழ்வு அப்பகுதி பொதுமக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments