அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது

 

அறந்தாங்கி பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின்  அறிவுரைப்படி, கல்லூரியில் தொடங்கப்பெற்ற தேர்தல் எழுத்தறிவுக்குழுவின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான ஓவியப்போட்டி மற்றும் பாட்டுப்போட்டிகள் நடத்தப்பெற்றன. 

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா,கல்லூரி வளாகத்தில், கல்லூரி முதல்வர் முனைவர் கு.ரேணுகாதேவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.விழாவில் ,அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டாட்சியர் அவர்களின் சார்பில், அறந்தாங்கி தேர்தல் துணை வட்டாட்சியர் திருமதி S. கவிதா, மண்டல துணை வட்டாட்சியர் K.ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற  மாணவன் சு சிவராமனுக்கு ரூபாய் 500 ரொக்கப்பரிசு மற்றும்  சான்றிதழ், இரண்டாம் பரிசு பெற்ற ஆ.நவீன்குமாருக்கு ரூபாய் 300 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் பரிசு பெற்ற மாணவி இரா.மாலினிக்கு ரூபாய் 100 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பெற்றன.

பாட்டுப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்கள் க.பாரத், ர.துர்காதேவி, செ.சிந்துமதி, செ.வர்ஷினி, க.வைஷ்ணவி ஆகியோருக்கு தலா ரூபாய் 100 ரொக்கப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன. ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் கு.ரேணுகாதேவி அவர்கள் வழங்கி, மாணவர்களை வாழ்த்தினார்.கல்லூரித்தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.திருவாசகம், தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் முனைவர் கா.காளிதாஸ் , இரா.ராஜலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.  கல்லூரித்தேர்தல் எழுத்தறிவுக்குழு ஒருங்கிணைப்பாளர் மு.பழனித்துரை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.

Post a Comment

0 Comments