மணமேல்குடியில் மருதுபாண்டியர்கள் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அகமுடையார் நலச்சங்கத்தின் சார்பாக மாபெரும் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது

 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மருதுபாண்டியர்கள் 221வது குருபூஜை மற்றும் 115வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மணமேல்குடி ஒன்றிய அகமுடையார் நலச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாட்டுவண்டி எல்கைவண்டி பந்தயம் நடத்தப்படுவது வழக்கம்.அதுபோல இந்த ஆண்டு  நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடு,நடுமாடு கரிசான் மாடு என மூன்று பிரிவாக நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, திருச்சி,தஞ்சாவூர் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.

 மணமேல்குடியில் இருந்து  போகவர 
8 மைல் தூரம் பந்தைய எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பந்தையத்தில் கலந்து கொண்ட மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று  சீறிப்பாய்ந்து முந்திச் சென்றன போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3. லட்சத்தி 12, ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பரிசுக்கோப்பைகளும் சிறப்பு பரிசாக தட்டுவண்டி வழங்கப்பட்டது.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் கோப்பைகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
பந்தைய நிகழ்ச்சியை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் ரசிகர்கள் கண்டு ரசித்ததனர். மணமேல்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Post a Comment

0 Comments