டெல்லியில் உள்ள புனித இருதயர் கதீட்ரலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

 

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதிலும் கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் வருகைக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்களில் இன்று நள்ளிரவில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற இருக்கிறது இந்நிலையில், டெல்லியில் உள்ள புனித இருதயர் கதீட்ரலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினார்.புனித இருதயர் கதீட்ரலில் மெழுகு வர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்த அவர், அங்கிருந்த குடிலையும் பார்வையிட்டார்.

Post a Comment

0 Comments