புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி ஆறாவது வார்டு வட்டக் கழகம் சார்பில் மற்றும் அறந்தாங்கி கள்ளு சந்து குதிரை வண்டி கழகம் இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு குதிரை வண்டி எல்கைவண்டி பந்தயம் நடத்தப்பட்டது குதிரை வண்டி பந்தயத்தினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி. மெய்யநாதன் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST. ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்த குதிரை வண்டி பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது 50க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன பந்தய விழாவிற்கு சிவகங்கை ராமநாதபுரம் திருச்சி திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து குதிரை வண்டிகள் கலந்து கொண்டது வெற்றி பெற்ற குதிரைகளுக்கு ஒரு லட்சம் ரொக்க பரிசம் கோப்பைகளும் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சாலையில் இருபுறமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குதிரை வண்டி ரசிகர்கள் கண்டு களித்தனர் இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 Comments