புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வாகை மரத்து அருகில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாதாவின் நவநாள் திருவிழா திருப்பலி நடைபெற்றது.இந்த திருப்பலியில் நூற்றுக்கும் மேற்பட்ட அறந்தாங்கி கிறிஸ்தவ மக்கள் பங்கு பெற்றனர். இவ்விழாவின் தேர்பவனியை அறந்தாங்கி கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி A.அலெக்ஸாண்டர் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் புனித சவேரியார் அன்பிய மக்கள். அருட் சகோதரிகள் கிளை கிராம மக்கள்.அனைத்து கிறிஸ்துரசர் ஆலய பங்கு மக்கள் பங்கு பெற்று அன்னையின் ஆசிர்வாதத்தை பெற்றனர்.

0 Comments